கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

0 347
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர்.

பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான சுப்பிரமணியன்.இவர் பம்பரசுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர் சுவாமி கோயிலில் கடந்த 40 வருடமாக பட்டையத்தரராக கோவிலுக்கு பூஜை செய்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி இவர் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். பின்னார் 2 ம் தேதி காலையில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் இருந்த ரூ. 7000 பணம் ஒரு சவரன் கோல்ட் காயின் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந வந்தது. இதுகுறித்து சுப்பிரமணி லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.