திருச்சியில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அமைச்சர் அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட தொகுப்புகளை வழங்கினார்.

0 180
Stalin trichy visit

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி கருமண்டபம்  45வது வட்ட திமுக சார்பில் வட்ட செயலாளர் பிஆர்பி பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டின் பேரில் அப்பகுதியை சேர்ந்த 1500 ஏழை-எளிய பொதுமக்களுக்கு சத்தான கீரை, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்பினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையில் ஸ்டாலின் குமார் ,பகுதி செயலாளர் மோகன்தாஸ் ,தில்லை மனோகர் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.