தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

0 243
Stalin trichy visit

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

திருச்சி, ஜூலை 6 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் இந்த ஓராண்டு முழுவதும், திருச்சி தெற்கு மாவட்டத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி தெற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர கழக துணைச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பரிசுப் பொருள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர அவை தலைவர் நூற்கான் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் கலந்து கொண்டு பரிசு பொருள்களை வழங்கினர். இந்நிகழ்வில் மாநகர மாவட்ட கழக நிர்வாகிகள் மூக்கன் லீலாவேலு, பொன்செல்லையா, சரோஜினி, மணிமேகலை, தனசேகரன், ராஜேஷ்வரன், கார்த்தி பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், தர்மராஜ், ராஜ்முகம்மது, மணிவேல், விஜயகுமார் பாபு சிவக்குமார் துணை மேயர் திவ்யா, கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.