கல்லூரி மாணவியை கிண்டல் செய்த வாலிபர் கைது 

0 304
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரன் மகள் நிவேதா (20). இவர் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரி முடிந்த பின் அங்கிருந்து பஸ்சில் வரும் அவர் சிறுகனூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி திருப்பட்டூரில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது சி.ஆர்.பாளையம் நடுதெருவைச் சேர்ந்த தனசேகரன்(24 )என்பவர் மாணவி நிவேதாவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கிண்டல் செய்த தனசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.