மண்ணச்சநல்லூர் அம்மையப்பா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் பூரண விக்னேஸ்வரன். இவர் நேற்று முன்தினம் இரவு அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மண்ணச்சநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் உள்ள பூனாம்பாளையம் சட்டி கருப்பு கோவில் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக்கண்ட அந்த வழியே சென்றவர்கள் அவரை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.