பொரிகடையில் வேலை செய்த வாலிபர் சடலமாக மீட்பு…

0 367
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள நால்ரோடு பகுதியில் பொரிகடையில் வேலை செய்த வாலிபர் சடலமாக மீட்பு .

முசிறி தாலுக்கா திண்ணனூர் ஹரிசன தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் 30 வயதான காமராஜ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சமயபுரம் கடைவீதியில் உள்ள ஒரு பொரி கடையில் வேலை செய்து அங்கேயே தங்கி வந்துள்ளார்.இந்நிலையில் சமயபுரம் நால்ரோடு பகுதியில் இவர் உடம்பில் காயங்கள் ஏதுமின்றி சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சமயபுரம் போலீசார் மது போதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.