அதிமுக ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி, ஜூலை 26 அதிமுக ஓ.பி.எஸ். அணியின் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன் தலைமையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திருச்சி மாவட்டம், துறையூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அ தி மு க ஓ .பி. எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்ட்ம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன் மற்றும் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் டி.டி.வி. தினகரன் ஆதரவு அளித்துள்ளதாகவும் இதனால் குற்றவாளிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளதாகவும் கூறினார். கு.ப.கிருஷ்ணன் பேசும்பொழுது கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்த பொழுது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஏன் விசாரணை செய்யவில்லை என்றும், கார் ஓட்டுநராக இருந்த தனபால் மர்மமான முறையில் விபத்தில் மரணம் அடைந்தபோது அவரது மனைவிக்கு ஏன் ஆறுதல் கூறவில்லை என்றும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்ஈடுபட்டவர்கள் என்று திடீரென கேரளாவை சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் அது குறித்து உண்மை குற்றவாளிகளை ஆளும் அரசுவிரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.
திராவிட முன்னேற்ற கழகம் நல்லாட்சி தருவதாக இருந்தால் உடனடியாக கொலைகொள்ளை நடைபெற்ற கொடாநாடு வழக்குகளை உடனடியாக விசாரித்து அதில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வாங்கி தர வேண்டும்என்று கு.ப கிருஷ்ணன் கூறினார். மேலும் எங்களை எடப்பாடி அ.தி.மு.க கரை வேட்டியை கட்டக்கூடாது என்று சொன்னால் எடப்பாடி சிறை செல்வது உறுதி என்று கூறினார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சாமிகண்ணு, நகரசெயலாளர் மார்க்கெட் சரவணன், கிழக்குஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் பாளையம் குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்,கே சாமி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கருப்பண்ணன், தொகுதிசெயலாளர் ராமஜெயம் மீனவர்அணி மாவட்டசெயலாளர் நாகை சுந்தரம் உப்பிலியபுரம் ஒன்றியசெயலாளர் பாஸ்கர் பேரூராட்சி நகர கழகசெயலாளர் சௌந்தரராஜன் மாவட்டபிரதிநிதி ராமன் மற்றும் அர்ஜுனன், வையாபுரி, விஜயலட்சுமி, சண்முகம், ராமர், சபாபதி, சதீஷ் உட்பட்டகழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்