திருச்சி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

0 204
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திடீர் ஆய்வு மேற்கொண்டார் !

திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா போதிய மருந்துகள் இருக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார இதை தொடர்ந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும் மகப்பேறுவதற்காக வந்திருந்த பெண்களிடமும் மருத்துவமனை அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார் இது தொடர்ந்து மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்படும் உணவுகளின் தரம் குறித்தும் அங்கிருக்கும் உணவு கூடத்தில் முதல்வர் தயாரிக்கப்படும் உணவை ருசித்துப் பார்த்து ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்கள் கே நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.