கோவில் விழாவில் வியாபாரி மீது தாக்குதல்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் புனித மகதலா மரியா தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வந்தது இந்த திருவிழாவிற்காக வெளியூரில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர் திருவிழாவை முன்னிட்டு பழனியைச் சேர்ந்த மகுடீஸ்வரன் (54) கீசெயின் வகைகளை விற்பனை செய்து வந்தார்.
திருவிழா முடிவடைந்த நிலையில் , நேற்று மாலை சொந்த ஊரான பழனிக்கு கிளம்ப ஆயத்தமாகியுள்ளார்.அப்பொழுது கடைக்குச் சென்ற வடக்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்த இளைஞர்கள் கீசெயின் கேட்டுள்ளனர் . வியாபாரத்தை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பி விட்டதாக சொன்ன மகுடீஸ்வரன் மற்றும் சாகுல்ஹமீதிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். தகாதவார்த்தைகளால் பேசி வியாபாரி மகுடீஸ்வரன் மற்றும் சாகுல் ஹமீதை தாக்கியுள்ளனர் . சாகுல் ஹமீது போலீசாருக்கு தகவலளிக்க முயன்ற போது அவர்களது செல்போனை பறித்து சாலையில் வீசி உடைத்தனர் காயம் இழந்த வியாபாரி மகுடீஸ்வரன் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மேலும் வியாபாரிகளை நடுரோட்டில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது