தேசியக்கல்லூரியில் திறன்மேம்பாட்டு கலந்துரையாடல் கூட்டம்

0 273
Stalin trichy visit

திருச்சி தேசியக் கல்லூரி வணிகவியல் தடவாளவியல் மேலாண்மைத் துறை கூட்டமைப்பின் திறன் மேம்பாட்டு நிகழ்வாக  கலந்துரையாடல் கூட்டம்  நேற்று நடைபெற்றது.

தூய வளனார் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை பேராசிரியர் துளசி பாரதி  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கணிப்பொறியின் பயன்பாடு இன்றைய சூழ் நிலையில் எவ்வாறு உள்ளது என்றும் எந்த பட்டப்படிப்பாக இருந்தாலும் கணினி பயன்பாட்டு அறிவு அவசியமானது என்றும், இது வேலைவாய்ப்பு தயாரிப்புகளுக்கு அடிப்படை(Placement requirements) என்றும் விளக்கினார். இந்நிகழ்ச்சி மாணவர்கள்  கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அமைந்தது .

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் இளவரசு  தலைமை உரை ஆற்றினார்.. வணிகவியல் தலைவர் முனைவர் சர்மிளா, தடவாளவியல் துறைத் தலைவர் தி. ஜஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முனைவர் கனிமொழி  விழாவினை ஒருங்கிணைத்தார்

Leave A Reply

Your email address will not be published.