கஞ்சா போதையில் தகராறில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி மறியல்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் கடந்த சில தினங்களாக கஞ்சா போதையில் சில இளைஞர்கள் சாலையில் செல்பர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கஞ்சா போதையில் இளைஞர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதை அடுத்து துறையூர் கீரம்பூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை தடுக்க கோரியும் கஞ்சா போதையில் தகராரில் ஈடுபடும் இளைஞர்களை உடனடியாக கைது செய்யப் கோரியும் கீரம்பூர் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து இப்பகுதி பெண்கள் கூறும்போது வீட்டில் இருந்து பொருட்கள் வாங்க கடைக்கு செல்லும் போது கஞ்சா போதையில் இளைஞர்கள் தகாத வார்த்தைகளில் பேசி வம்பு செய்வதாகவும் இளம் பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் கூறினார். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக துறையூரில் இருந்து பச்சைமலை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியல் ஈடுபட்டவர்களடம் துறையூர் தாசில்தார் வனஜா பேச்சுவார்த்தை நடத்தி சட்ட ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.