ஆடி 18 விழா : மாவட்ட நிருவாகம் அறிவுரை

0 195
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவேரி, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று இறங்கவோ/குளிக்கவோ கூடாது. மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் அறிவிப்பு

தொட்டியம் வட்டம் : – 1. உன்னியூர் 2. பெரிய பள்ளிபாளையம், சின்னபள்ளி பாளையம், 3. ஸ்ரீராமசமுத்திரம் 4. சீலைப்பிள்ளையார்புத்தூர் 5. காடுவெட்டி 6. நத்தம் 7. எம். புத்தூர் (மேலக்காரைக்காடு, கீழகாரைக்காடு) 8. அரசலூர் (திருநாராயணபுரம், வரதராஜபுரம்) சீனிவாசநல்லூர் ( மகேந்திர மங்கலம், கீழசீனிவாசநல்லூர், சத்திரம் 10. மணமேடு
9. 11. முள்ளிப்பாடி (திருஈங்கோய்மலை) மொத்த படித்துறைகளின் எண்ணிக்கை -11

முசிறி வட்டம் : 1. முசிறி மேற்கு காவேரி பாலம், சந்தபாளையம், பரிசல் துறை (அழகு நாச்சியம்மன் கோவில்), அக்ரஹாரம், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம் மொத்த
படித்துறைகளின் எண்ணிக்கை 7
ஸ்ரீரங்கம் வட்டம் :
1. பெட்டவாய்த்தலை (பழங்காவேரி படித்துறை) 2. முக்கொம்பு 3. கம்பரசம்பேட்டை (தடுப்பணை) 4. முருங்கப்பேட்டை 5. முத்தரசநல்லூர் அக்ரஹாரபடித்துறை 6. ப;ர் படித்துறை 7. அல்லூர் மேலத்தெரு படித்துறை 8. திருச்செந்துறை வெள்ளாளர் தெரு படித்துறை 9. அந்தநல்லூர் படித்துறை 10. திருப்பராய்துறை – துலாஸ்தானம் 11. மேலூர் அய்யனார் படித்துறை 12. கீதாபுரம் படித்துறை 13. அம்மா மண்டபம் படித்துறை 14. கருடமண்டபம் படித்துறை 15. பஞ்சக்கரை படித்துறை 16. பனையபுரம் படித்துறை 17. உத்தமர்சீலி நடுவெட்டி படித்துறை 18. கிளிக்கூடு படித்துறை

மண்ணச்சநல்லூர் வட்டம்:-1.கரியமாணிக்கம் மேற்கு கிராமம் வாத்தலை  2. கரியமாணிக்கம் கிழக்கு கிராமம் சிறுகாம்பூர் 3. திருவாசி கிராமம் துடையூர் நொச்சியம் மான்பிடி மங்களம்
களிங்காயிகோவில் 4. மாதவ பெருமாள் கோவில் கிராமம் 5. பிச்சாண்டார் கோவில் கிராமம் – அய்யன் வாய்க்கால்
திருவெறும்பூர் வட்டம்:- 1. வேங்கூர் பூச படித்துறை2. பனையக்குறிச்சி படித்துறை 3. கீழ முல்லக்குடி படித்துறை 4. ஒட்டக்குடி படித்துறை

இலால்குடி வட்டம்:- 1. கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி வாய்க்கால் அப்பாத்துரை கிராமம் 2. கொள்ளிடம் ஆறு – கூகூர், அரியூர் (செங்கரையூர் மற்றும் பூண்டி பாலம்) விரகாலூர் மற்றும் தின்னக்குளம், நத்தமாங்குடி

மாநகரப்பகுதி:- 1. அம்மா மண்டபம் 2. கருடா மண்டபம் 3. கீதாபுரம் 4. சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை 2, 5. காந்தி படித்துறை 6. ஓடத்துறை 7. அய்யாளம்மன் படித்துறை 8. தில்லைநகர் படித்துறை – 2
ஆடி -18 மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் ஆற்றுப் பகுதிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை/ ஊரகவளர்ச்சித்துறை/ காவல்துறை/ பொதுப்பணித்துறை/ உள்ளாட்சித்துறை/ மருத்துவத்துறை/மீட்புப்பணிகள்துறைகளைச் சார்ந்த பணியாளர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குவதோடு, மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி எவ்வித அசம்பாவிதம் இன்றி பொதுமக்கள் ஆடி-18 விழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சி.மா.பிரதீப் குமார்  தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.