முதியோர் கொடுஞ்சொல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஜூன் 16 முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் சான்றிதழ் அளித்து பாராட்டு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தலை மையில் நடைபெற்றது. கூட்டத் தில், ஆட்சியர் தலைமையில் முதி யோர் கொடுஞ்சொல் எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் எடுத் துக் கொண்டனர்.
இதையடுத்து, முதியோர் கொடுஞ்சொல் எதிர்ப்பு தின மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி,ஓவியப் போட்டி,கவிதைப் போட்டி, ஸ்லோகன் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ,மாண விகளுக்கு சான்றிதழ்கள், மரக்கன்று கள் வழங்கி பாராட்டினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ. 11,445 மதிப் பிலான மூன்று சக்கர சைக்கிள், ஒருவருக்கு ரூ.14,500 மதிப்பிலான தக்க செயலியுடன் கூடிய திறன்
பேசி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 5 பேருக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, கூட்டத்தில் மாவ ட்ட வருவாய் அலுவலர் ஆர். பாலாஜி, மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலர் எஸ். ஜெய சித்ரகலா, மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் இரா. இர விச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.