கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

0 250
Stalin trichy visit

திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம், மணப்பாறை, அருகே உள்ள கணவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் (23). சென்ட்டிரிங் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் கணக்கப்பிள்ளையூரைச் சேர்ந்த கணேசன் மகள் அனிதா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். பெற்றோர் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் மணப்பாறை ரயில் நிலையம் அருகே உள்ள சிதம்பரத்தான்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான கனகராஜ் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அனிதா தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் புரிவதால் நேற்று இரவுப்பணிக்கு சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். இருவருக்கும் வாயத்தகராறு ஏற்பட்டு அனிதா ஒரு அறையில் இருந்தபோது மற்றொரு அறையில் இருந்த கனகராஜ் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்த அனிதா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து கனகராஜை மீட்டபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை சோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.