தீரன்சின்னமலை நினைவு நாள் : தெற்கு மாவட்ட தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்ரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள அவரது
திருவுருவச் சிலைக்கு மாநகர செயலாளரும் மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை மாவட்ட செயலாளர் சேகர் பகுதி செயலாளர் இ.எம் தர்மராஜ் மோகன் ராஜ்முகமது ஏ.எம். ஜி. விஜயகுமார் பாபு மணிவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.