விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…

0 345
Stalin trichy visit

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். முசிறி கோட்டாட்சியர் ராஜன், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், முசிறி ஒன்றிய குழு தலைவர் மாலா, முசிறி நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி, நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரும், முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் இணைந்து மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 222 மாணவிகளுக்கும் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 197 மாணவர்களுக்கும் தண்டலை புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 126 மாணவ, மாணவிகளுக்கும் சேர்த்து விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

விழாவில் கல்வி மாவட்ட அலுவலர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பெரியசாமி. திருஞானம், தங்கவேல்,
நகர செயலாளர் சிவக்குமார், திமுக நிர்வாகிகள் ஆப்பிள் கணேசன், மயில்வாகனன், பள்ளி தலைமை ஆசிரியர்கள தீபா, பல்த்தசார், புகழேந்தி, ஆசிரியர்கள்,வாணி ஸ்ரீ. புஷ்பராஜ்
திமுக பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.