ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10% ஒய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்-ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை.
திருச்சி, ஆக.8 தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் ஆசிரியர் சங்கம் முசிறி வட்ட கிளைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன்னுச்சாமி அனைவரையும் வரவேற்றார். செயலாளர் திருஞானம் மாதாந்திர அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராசு வரவு செலவு அறிக்கை வாசித்து ஒப்புதல் பெற்றார். கூட்டத்தில் ஓய்வூதியர்கள் அவர்களுக்குரிய காலத்தில் நேர்காணல் செய்ய வேண்டிய முறைகளைப் பற்றியும் , ஓய்வூதியர்கள் தங்கள் இணையர் விவரப் படிவம் உறுப்பினர்களுக்கு வழங்கி கருவூலத்தில் கொடுக்க வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் 70 வயதில் நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க அரசை வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு அகவிலை உயர்த்தும்போது தமிழக அரசும் உயர்த்தித்தர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் மூத்த உறுப்பினர் சக்திவேல் நன்றி கூறினார்.