சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை பொது விருந்து
திருச்சி, ஆக.14 திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடு மற்றும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றத்தாழ்வு இன்றி பொது விருந்து நடைபெற உள்ளது.
நாளை 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பகல் 12 மணி அளவில் சமயபுரம் மாரியம்மன் க்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் ஏற்றத்தாழ்வுயின்றி திருக்கோயில் மாரியம்மன் மண்டபத்தில் பக்தர்களுக்கு சுதந்திர தின பொது விருந்து மற்றும் பருத்தி புடவை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில் அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்டார் கலந்து கொள்ள உள்ளனர் என கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.