நிரந்தர வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை நியமிக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
திருச்சி, ஆக.14 திருச்சி மாவட்டம் துறையூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் 15 வது மகாசபை கூட்டம் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் துறையூரில் இயங்கி வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார் எனவே லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களை இன்னல்களை சரி செய்ய உடனடியாக நிரந்தர வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை நியமிக்க வேண்டும்,
துறையூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 50% பணியாளர்களே பணியில் உள்ளனர் இதனால் லாரி மற்றும் அனைத்து வாகன பணிகள் விரைந்து முடிக்க 100 சதவீத பணியாளர்களை பணி நிரப்ப வேண்டும் வேண்டும் என்றும் துறையூரில் ஆயிரத்திற்கும் மேலான லாரிகள் இயங்கி வருகின்றன இரவு நேரங்களில் லாரிகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தும் வண்ணம் லாரி பார்க்கிங் அமைத்து தர வேண்டும் என்றும் இதனால் லாரி உரிமையாளர்களுக்கு திருட்டு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்து பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் துறையூர் நகருக்குள் இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் ரிங் ரோடு அமைத்து தர வேண்டும் நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் லாரி தொழிலை காத்திட தனி நல வாரியம் அமைத்திட வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சியில் செயலாளர் பாஸ்கர் கலைச்செல்வன் ரங்கசாமி சீனிவாசன் மற்றும் எஸ்கேபி ஸ்ரீதர் உள்பட நூற்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்