மணப்பாறையில் சுதந்திர போராட்ட தியாகி திடீர் உண்ணாவிரதம் போராட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலையின் முன்பு சேதுரெத்தினபுரத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுந்தரம் (வயது 95) என்பவர் தனது மகனுக்கு அரசு வேலை மற்றும் அரசின் சார்பில் வீடு வழங்கக்கோரி பதாகைகள்
ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் வருவாய் துறையினர் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சுந்திர நாளில் வீட்டிற்கு செல்லும்படியும் கூறி ஆட்டோவை பிடித்து அவரை ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
சுதந்திர தின நாளில் சுதந்திரத்திற்கு போராடிய சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.