பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள பொய்கைப்பட்டி ஊராட்சி, சாம்பட்டி ஊராட்சி, கருப்பூர் ஊராட்சி, செட்டியபட்டி ஊராட்சி, சீகம்பட்டி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் திறப்பு அந்தந்த பகுதிகளில் ஒரேநாளில் நடைபெற்றது. மேலும் மணப்பாறை ஒன்றிய பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி ஆகியோர் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்கள். விழாக்களில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.