முரசொலி மாறனின் 90வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஆக.17 முரசொலி மாறனின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் முரசொலி மாறன் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது…
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் முத்து செல்வம் ,விஜயா ஜெயராஜ்,மாவட்ட பொருளாளர் துரைராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செவ்வந்திலிங்கம்,பகுதி செயலாளர் இளங்கோ, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்….