காணாமல் போன செல்போன்களை மீட்டு ஒப்படைத்த காவல்துறையினர்

0 358
Stalin trichy visit

காணாமல் போன செல்போன்கள் மீட்பு-முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் உரியவர்களுக்கு வழங்கினார்.

திருச்சி, ஆக.17  முசிறி காவல் சரக்கத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முசிறி காவல் சரக்கத்திற்கு
உட்பட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனது. காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு செல்போன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் கதிரேசன் மேற்பார்வையில் காவலர் சூர்யா கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். செல்போனின் இஎம் இ எண் வாயிலாக காணாமல் போன 22 செல்போன்கள் மீட்கப்பட்டது.
இதையடுத்து முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில் காவல் ஆய்வாளர் கதிரேசன் முன்னிலையில் நேற்று 22 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிமையாளர்கள் செல்போன்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு காவல்துறையினருக்கு நன்றி கூறி சென்றனர். செல்போன்களை கண்டுபிடித்த காவலர் சூர்யாவிற்கு காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.