எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் பிறந்த நாள் விழா
திருச்சி மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தா.பேட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் கரிகாலியில் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மா.கலைச்செல்வன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்வம் சந்திரசேகரன், முத்துச்செல்வன், பிரேம், சுமதி, மணிகண்டன், ராகவன், கலையரசன், ராஜ்கிரண் மற்றும் கரிகாலி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.