டிப்பர் லாரியில் மணல் திருட்டு : ஓட்டுநர் கைது

0 239
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சித்தாநத்தம் பகுதியில் மணப்பாறை போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது கரிச்சாம்பட்டி என்ற இடத்தில் டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனர் கரூர் மாவட்டம், பில்லூரைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சித்தாநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.