அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 317
Stalin trichy visit

லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்,மஞ்சப் பையை கையில் எடுப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சப்பையை கையில் எடுப்போம் மாசற்ற பூமியை உருவாக்குவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சப் பையை கையில் எடுப்போம், மாசற்ற பூமியை உருவாக்குவோம் என மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சிவரஞ்சனி உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறச்செல்வன்,கோத்தாரி சர்க்கரை ஆலையின் தொழில்நுட்ப முதுநிலை பொது மேலாளர் ராமச்சந்திரன்,டிஸ்டிலரி பொது மேலாளர் புஷ்பராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை பயன்படுத்தி நடைமுறைப்படுத்துவோம் மாசற்ற பூமியை உருவாக்கும் என உறுதிமொழி ஏற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நினைவாக அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.