அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

0 240
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஒத்தக்கடையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சமயபுரம் சுங்கசாவடி பகுதியில் உள்ள ஒத்தக்கடை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் 43 வயதான ராமதாஸ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் திருச்சி அரசுமருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு முறை இருதய அறுவை அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாத ராமதாஸ் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.