தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 11-ம் தேதி திருச்சி வருகை

0 471
Stalin trichy visit

ஒவ்வொரு ஆண்டும் குறுசை சாகுபடிக்காக ஜூன். 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். தற்போது மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் வரும் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார். அதையொட்டி வரும் 11ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். காலை 10.15 மணிக்கு கல்லணையை பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார். தொடர்ந்து 10.30 முதல் 12.30 மணிவரை ஆய்வு நடத்துகிறார். 12 ஆம் தேதி சேலம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதனை தொடர்ந்து 10.30 முதல் 10.45 மணியளவில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்கிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சி மற்றும் சேலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.