கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

0 254
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட கழக மீனவர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா
நலத்திட்ட உதவிகள் உபகரணங்கள் மற்றும் மேலாடைகள் வழங்கும் நிகழ்வு
கூட்டத்திற்கு வரவேற்புரை மாவட்ட மீனவர் அணி தலைவர் குமார். முன்னிலை மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சாந்தகுமாரி சாலமோன் மற்றும் மாநகர அமைப்பாளர் பாவா
நிகழ்வில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாநில கழக மீனவர் அணி செயலாளர் ஏ.ஜோசப் டான்லின்
நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு. மதிவாணன் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு குணசேகரன் ராஜேஷ்வரன் K.K.k கார்த்தி நன்றியுரை மீனவர் அணி மாநகர தலைவர் ரத்தினவேல்

இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது….

2006 – 2011ம் ஆண்டில் மீனவர்களுக்கு 88 கோடி 51 லட்சம் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியவர்கள் மறைந்த கலைஞர் அவர்கள். மீனவர்களுக்கான சேமிப்புத் தொகை மகளிர் காண நிவாரணத் தொகை 61 கோடி 57 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. மீனவர்கள் என்பவர்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கீடு அதிகமாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் 1076 கிலோமீட்டர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு அதிகம் உண்டு. நீங்கள் வேர்வை சிந்தி உழைக்கக் கூடியவர்கள் கோட் சூட் போட்டு கொண்டு இருப்பவர்கள் அல்ல. இதற்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தான் மீனவர் அணி உருவாக்கப்பட்டு அதற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளன.

போர் வந்தால் ராணுவ வீரர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இருக்குமோ இல்லையோ என்று சொல்ல முடியாது. மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கடலுக்கு செல்லும்போது அவர் குடும்பத்தார் உயிரை பிடித்துக் கொண்டு இருப்பார்கள் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று மீனவர்களுக்கு தினம் தினம் போர் தான். கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஒவ்வொரு தமிழருக்கும் கடமை உண்டு என்றார்.

Leave A Reply

Your email address will not be published.