கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குற்ற வழக்கு : முசிறி கோட்டாட்சியர் எச்சரிக்கை

0 339
Stalin trichy visit

பொது இடங்களில் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – முசிறி கோட்டாட்சியர் எச்சரிக்கை

 

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார்.
துணை வட்டாட்சியர்கள் தங்கவேல், செந்தில்குமார், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தங்கள் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினர். இந்நிகழ்வில் திருத்தியமலை முதல் கோமங்கலம் சாலை மற்றும் சாத்தனூர் முதல் கோட்டாத்தூர் சாலைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும், கோட்டாத்தூரில் காவிரி குடிநீர் சரிவர வருவதில்லை. அதனை சரிசெய்து கெடுக்க வேண்டும், ஜெம்புநாதபுரம் பகுதியில் தனியார் கம்பெனியில் வெளிவரும் புகை காரணமாக சுற்றுப்புற கிராமங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார். மேலும் முசிறி மலையப்பபுரம் நர்சரி தோப்பு பகுதியில் மனிதக் கழிவுகள் கொட்டப்படுகிறது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் திருச்சி சாலையில் சுடுகாட்டுத்துறை முன்பு கோழி கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது எனக் தெரிவித்தனர். அதற்கு கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா தரவும், சர்வே பிரிவில் நிலம் அளக்கவும் தாமதமாகிறது எனக்கூறினர்.
இந்தக் குறைகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தனிப்பட்ட புகார் இருப்பின் எழுத்து மூலமாக தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.கூட்டத்தில் முசிறிகோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.