துணை சுகாதார நிலையம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

0 417
Stalin trichy visit

திருச்சி மணிகண்டம் பகுதியில் ரூபாய். 31 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் ..

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்,

இந்த துணை சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கான சிகிச்சையும், மற்றும் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கும், பயனடையும் வகையிலும், மேலும் கிராம சுகாதார செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், ஆய்வாளர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது, இதில் மக்களை தேடி மருத்துவ முகாம் மூலம் உயர் ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று பயனடையும் வகையில் அமைந்துள்ளது..

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் சுப்பிரமணி மற்றும் பொதுமக்கள் மருத்துவர்கள் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்…

Leave A Reply

Your email address will not be published.