தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

0 198
Stalin trichy visit

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினார், இக்கூட்டத்திற்கு திமுக கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நடைபெற உள்ள கூட்டுறவு தேர்தல் சம்பந்தமாகவும், மற்றும். திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்களின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட, மாநகரம், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.