சி.பி.ஐ.மாநில செயலாளர் இரா.முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி

0 320
Stalin trichy visit

திருச்சி, அக்.5 இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

நேற்று கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு 2 நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தொடர்ந்து  முத்தரசனுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.