உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, அக்.12 திருச்சி மாவட்டம் சமயபுரம் சந்தைகேட் பகுதியில் உலக கண்ணோளி தினத்தை முன்னிட்டு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
உலக கண்ணொளி தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவக்
கல்லூரியின் டீன் துளசி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவ,மாணவிகள் கண்களில் கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியானது சமயபுரம் சந்தைகேட் பகுதியில் தொடங்கி தேரடி வீதி வழியாக ஊர்வலமாக சென்று ச. கண்ணனூர் பேரூராட்சியை சென்றடைந்தது.
இந்நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் சமயபுரம் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.