முசிறி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
முசிறி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான திருத்தலையூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், அப்பகுதிகளில் குடிநீர் உப்பு தண்ணீராக வருவதாகவும், கழிவு நீர் வாய்க்கால் நீண்ட காலமாக தூர் வாராமல் உள்ளது, திருத்தலையூர் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார், இது சம்பந்தமாக பல இடங்களில் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்றும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீடுகளில் மழைநீருடன் கழிவு நீர் புகுந்து உள்ளது என்றும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் முசிறி முதல் துறையூர் செல்லும் சாலையில் திருத்தலையூர் பகுதியில் பொதுமக்கள் மழைக்காலங்களில் கழிவு நீருடன் மழை நீர் வீட்டிற்குள் புகுவதாகவும், குடிநீர் உப்பு தண்ணீராக கிடைப்பதாகவும் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படவில்லை என குற்றம் சாட்டி காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது, போலீசார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.