மணப்பாறையில் நியாயவிலைக் கடையில் துணை ஆட்சியர் திடீர் ஆய்வு

0 14
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 20  திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு எடை அளவு குறைவாகவும், அரிசி, சர்க்கரை மற்றும் எண்ணை பாக்கெட்டுகளை வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தொடர்புகார்கள் சென்றன. இதனையடுத்து புகார் தொடர்பாக இன்று துணை ஆட்சியர் அமுதா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று மணப்பாறையில் உள்ள ரேசன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நியாய விலைக் கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருப்பதாகவும், விற்பனையாளர் கடுமையாக நடந்து கொள்ளவதாகவும் மக்கள் புகார் அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு நிலவரம், பொதுமக்களின் கோரிக்கை குறித்தும் கேட்டரிந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.