தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

0 363
Stalin trichy visit

சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி, அக்.14 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்ப்பு.

மண்ணச்சநல்லூரில் உள்ள சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்.பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் சமூகநீதியும் பொருளாதார முன்னேற்றமும் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தி மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் சிறப்பாக வினா எழுப்பிய கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும், பரிசுகளும், மேலும், “தமிழ்ப் பெருமிதம்” சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாரட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும், பரிசுகளும் வழங்கினார்கள். இந்நிகழ்வில், சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி தலைவர் லோகநாதன், துணை தலைவர் ரவிச்சந்திரன். இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், அரசு அலுவலர்கள், பேராசியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.