குளங்களில் தூர்வாரும் பணி எம்.எல்.ஏ. ஆய்வு

0 215
Stalin trichy visit

மணப்பாறை பகுதியில் உள்ள குளங்களில் மழைநீர் சென்றடைய தூர்வாரும் பணி நடவடிக்கைகள் குறித்து MLA அப்துல் சமது ஆய்வு

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள பின்னத்தூர், பிச்சம்பட்டி, மணப்பாறை குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் அவர்கள் ஆய்வு செய்து எதிர்வரும் மழைகாலத்தில் மழைநீர் பகுதிக்குள் நுழையாதவாறு மழைநீர்கள் குளங்களுக்குள் செல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளங்களை தூர்வாரி பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர், நீர்வளத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.