திருச்சியில் டிஜிட்டல் அரெஸ்ட் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் பறிமுதல் – ஒருவர் கைது

0 14
Stalin trichy visit

திருச்சி, அக்.28  திருச்சியில் டிஜிட்டல் அரெஸ்ட் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் பறிமுதல் – ஒருவர் கைது

சமீபகாலமாக ஆன்லைன் மூலம் மோசடி செய்வது, டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறி மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு புகார்களை சைபர் கிரைம் காவல் நிலையங்களில் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உறையூர் பகுதியில் அறையில் இருந்து டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய பயன்படுத்தப்படும் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து இன்று மாநகர காவல் துணை ஆணையர் மணிகண்டன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

அதில் டிஜிட்டம் அரெஸ்ட் உள்ளிட்ட மோசடி செயல்களில் ஈடுபட Sim boxes என்கிற அதிநவீன சாதனங்களை பயன்படுத்துகிறார்கள் இந்த சாதனங்களை பயன்படுத்துவதால் இந்திய அரசிற்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படும் அதன் காரணமாக இந்த சாதனங்களை இந்தியா தடை செய்துள்ளது இந்த நிலையில் திருச்சி உறையூரில் இது பயன்படுத்தப்படுவதாக தொலைதொடர்பு துறை அதிகாரிகள் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது அதன்படி சைபர் க்ரைம் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு டிஜிட்டல் அரெஸ்ட் க்கு பயன்படுத்தப்படும் சிம் பாக்ஸ்கள், சிசிடிவி வைபை மோடம் உள்ளிட்டவை இருந்துள்ளது அதனை பறிமுதல் செய்துள்ளோம் மேலும் இதை பயன்படுத்திய ஒருவரை கைது செய்துள்ளோம்.

இதை தொழில்நுட்பம் நன்றாக தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதை அங்கிருந்த நபர் பயன்படுத்தி கொண்டுள்ளார், அவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவரின் பெயர் விவரத்தை தற்போது வெளியிட முடியாது, அப்படி வெளியிட்டால் புலன் விசாரணையை அது பாதிக்கக்கூடும். அதனால் தற்போது அந்த விவரங்களை வெளியிட முடியாது அவர் தொழில்நுட்ப வல்லுநரா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம். மேலும் இவர் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா இதுபோன்ற சாதனங்கள் திருச்சியில் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் தொடர் விசாரணை செய்து வருகிறோம் இந்த சாதனத்தை பயன்படுத்தி காவல்துறையினரை போல மிரட்டி டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாக கூறுகிறார்கள் இது போன்று யாரும் செய்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை உடனடியாக சைபர் கிரைம் போலீசில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட் தொடர்பாக பல்வேறு புகார்கள் இருந்து வரும் நிலையில் திருச்சியில் டிஜிட்டல் அரஸ்ட் மூலம் மிரட்டுவதற்கான சாதனங்களை பயன்படுத்தி நபர்கள் கைது செய்யப்பட்டு அந்த சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.