திருச்சி சீனிவாசநகர் பகுதியில் நிரம்பி வழியும் பாதாள சாக்கடைகளால் சுகாதார சீர்கேடு

0 15
Stalin trichy visit

திருச்சி,அக். 28 திருச்சி சீனிவாசநகர் 5வது மெயின்ரோடு, திலகர் தெரு பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி வழிவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

திருச்சி மாநகராட்சியின் முக்கிய பகுதியான வயலூர்ரோடு சீனிவாசநகர், பாரதிநகர், குமரன்நகர், அம்மையப்பநகர் பகுதியில் 10 ஆயிரத்தும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் வடிகால்கள் இல்லாததால், சிறிதளவு மழை பெய்தாலே பாதாள சாக்கடைகள் நிரம்பி வழிவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக பாதாள சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சீனிவாசநகர் 5வது மெயின்ரோடு, திலகர் தெரு, பாரதிநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வழிந்து சாலையில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீருடன் மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

மேலும் பாதாள சாக்கடை நிரம்பி வழிவதால், வீடுகளில் கழிப்பறையில் தண்ணீர் செல்லாமல் தடைப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். திலகர் தெருவில் உள்ள ஆள் இல்லாத பழைய வீட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்புகளை எடுப்பதுடன் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.