காசி விஸ்வநாதர் கோயிலில் நவராத்திரி் 8-ம் நாள் விழா
வாளாடியில் விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் நவராத்திரி் விழா 8 ம் நாளில் ஸ்ரீ விஷ்னு துர்க்கையம்மனுக்கு தனதுர்கா அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே
வாளாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு விசாலாட்சி அம்மன் சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் நவராத்திரி் விழாவின் 8 ம் நாளில் துர்காஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ விஷ்னு துர்க்கையம்மனுக்கு தனதுர்கா அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வாளாடி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு விசாலாட்சி அம்மன் சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும். மேற்கு பார்த்து அமைந்துள்ள காசி விஸ்வநாதர் முருகன் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்துள்ளதும், விஷ்ணு துர்க்கை தெற்கு பார்த்து அமைந்துள்ளதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு. பழமையானஇக்கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ம் தேதி கும்பாபிஷே விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15் ம் தேதி தொடங்கியது.கோயில் வளாகத்தில் 50 க்கு மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா நடைப்பெற்று வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் இந்நிலையில் நவராத்திரி விழாவின் 8 ம் நாளில் துர்காஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ விஷ்னு துர்க்கையம்மனுக்கு தன துர்கா அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிப்பட்டனர்.