தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர் நிர்வாகிகளுக்கான நேர்காணல்
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் நிர்வாகிகளுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது..
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய மாவட்ட வடக்கு,தெற்கு உட்பட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நேர்காணலில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநில பொறுப்பாளர் ஆனந்தகுமார், மாநில துணைச் செயலாளர்கள் ஜோயல், பிரகாஷ், இன்ப ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரபு, சீனி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..