சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வன்னி மரத்தில் அம்புபோடும் நிகழ்வு
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் நிறைவு நாளில் அம்மன் வேடுபரி அலங்காரத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதிஉலா நடைப்பெற்று வன்னி மரத்தில் அம்பு போடும் நிகழ்வு நடைப்பெற்றது.
திரளான பக்தர்கள் பங்கேற்பு.
அம்மன் ஸ்தலங்கலில்
பிரசித்தி பெற்றது முதன்மையானதும் சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.10 நாட்கள் நடைபெறும் இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15 ம் தேதி தொடங்கியது. இதில் புரட்டாசி மாதம் அமாவாசை மற்றும் மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேதி தேவி பாகவதம், அக்னி பாகவதம், அக்னி புராணம்,தேவி மகாத்மியம் ஆகிய புராண கூற்றுகளின் படி அதர்மமான மகிஷாசுரனை அழிக்க ஊசி முனையில் துர்க்கை,மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு,கடை என 9 நாட்கள் கடும் தவம் புரிந்து 10 வது நாள் விஜயதசமி அன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தனிச்சிறப்பாகும்.

நவராத்திரி நாட்களில் அம்மனை வழிபடுவதன் மூலம் பக்தர்களுக்கு வறுமை ஒழியும், தனதானிய பலன் கிடைக்கும், பகை ஒழித்து கல்வி வளர்ச்சி பெற்று துன்பம் நீங்கும், செல்வ வளர்ச்சி, சேமவிருத்தி, பயம் நீங்குதல், சர்வ மங்களம் அழுதல் சகலதோஷ நிவர்த்தி, சகல காரிய அனுகூலம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதிஉலா நடைப்பெற்று கடைவீதியில் உள்ள வன்னி மரம் சென்றடைந்தது.பின்னர் வன்னி மரத்திற்க்கு பால், தயிர், மஞ்சள் பொடி,சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாதரணை நடைப்பெற்றது.
இதனைத்தொடர்ந்து வன்னிமரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சியுடன் நவராத்திரி திருவிழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள் செய்திருந்தனர்.