கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

0 224
Stalin trichy visit

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆ. கருப்பம்பட்டி பகுதியில் வசிப்பவர் முத்துகிருஷ்ணன்

இவர் தனது தோட்டத்தில் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார் வழக்கம் போல் இன்று மாடுகளை வயலில் கட்டி வைத்திருந்தார்

அப்பொழுது ஒரு மாட்டை கிணற்றின் அருகே கட்டி போட்டுள்ளார்

கிணற்றின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தது

இதனை அடுத்து உப்பிலியபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது

தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த பசுமாட்டின் கண்களை துணியால் கட்டினர் பின் பொதுமக்கள் உதவியுடன் 2 மணிநேரம் போராடி மாட்டை உயிருடன் கிணற்றில் இருந்து மீட்டனர்

Leave A Reply

Your email address will not be published.