பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சி.பி.எம்.கண்டன ஆர்ப்பாட்டம்

0 360
Stalin trichy visit

புள்ளம்பாடியில் அடிப்படை வசதி கோரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள காமராஜர் சிலை அருகே அடிப்படை வசதி கோரி புள்ளம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
புள்ளம்பாடியை தனி தாலுக்காவாக உருவாக்கிடு, அனைத்து வார்டுகளுக்கும் சுத்தமான குடிநீர்,தெரு விளக்கு, தார் சாலை, புள்ளம்பாடி ரயில்வே மேம்பாலம், சமுதாயக்கூடம் அமைத்திட கோரியும்,

புள்ளம்பாடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தியும் மருத்துவப் பணியாளர் நியமித்தல் மற்றும் ஸ்கேன் வசது செய்யக்கோரியும்,

இருளர்த்தெரு மின்விளக்கு, தெருவிளக்கு, புதிய போஸ்ட் அமைத்தல், மின் இணைப்பு இல்லாத அனைவருக்கும் மின் வசதி,குடியிருப்போருக்கு வீட்டு வரி ரசீது கோரியும்,

இருளர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ், சுத்தமான கொள்ளிட குடிநீர் வசதி கோரியும்,

தைலாகுளம் தொடர் போராட்டத்தால் பட்டா கணக்கு எடுத்தும் 75 பேருக்கு பட்டா வழங்காத காரணம் என்ன விளக்க கோரியும்,

பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்களுக்கும் 100 நாள் வேலை சம்பளம் வழங்கிட கோரியும்,

சகாயமாதா கோயில் முதல் காமராஜர் சிலை வரை உள்ள குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரி செய்ய கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய சீலன் மாவட்ட செயற்குழு சந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய,பகுதி, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.