கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள்

0 393
Stalin trichy visit

புதுக்கோட்டை, நவ. 1 புதுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகளை தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புதிட்டம்) செய்யது முகம்மது தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, நவ.1 கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி, வினாப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் தொடக்க விழா புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகத் தேர்வுக்கூட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழிகாட்டலுடன் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலைசெந்தில் வரவேற்புரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) ரமேஷ், புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி) செந்தில், (தனியார் பள்ளிகள்) அறவாளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை மாவட்ட தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) செய்யது முகம்மது கலந்துகொண்டு தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்து பேசும்போது,
முத்தமிழறிஞர் கலைஞர் பெண்களுக்காகவும், மாணவ,மாணவிகளுக்காகவும் எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளார்கள். அவரைப்போல நீங்கள் சமூகப்பணியாற்றவேண்டும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அவரது நூற்றாண்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளாகிய உங்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி, வினாப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் உங்களின் எதிர்கால நலனுக்காகத்தான் கண்டிக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு செயல்பட்டால் எதிர்கால இலக்கினை எளிதில் அடையலாம். தோல்வியே வெற்றிக்கு முதல்படி. இங்கு பங்கேற்பவர்கள் அனைவரும் வெற்றி பெற இயலாது. எவரேனும் ஒருவர் தான் வெற்றி பெற இயலும். ஆதலால் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றியை தன் வசமாக்கலாம். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் கூறியதைப்போல கனவு காணுங்கள் என்பதை நீங்கள் மனதில் இருத்தி உயர்ந்த எண்ணத்தினை நீங்கள் நினைத்துக்கொண்டு பயிற்சியும், முயற்சியும் செய்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தினை அடையலாம். உங்களை உற்சாகப்படுத்தவேண்டும், ஊக்கப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட அளவிலான இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ10 ஆயிரம் ரொக்கப்பரிசினையும், பாராட்டுச்சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் வழங்க உள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்( மேல்நிலை) முருகையன், தொடக்கக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் ( பொ) தங்கமணி, பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்(இடைநிலை) ராஜூ, பள்ளித்துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.