சுப்பிரமணியபுரம் அருளானந்தர் ஆலயத்தில் மாதா தேர் பவனி

0 297
Stalin trichy visit

ஜெபமாலை மாதம் நிறைவு நாளையொட்டி மாதாவின் தேர் பவனி- பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கிறிஸ்தவர்கள் அக்டோபர் மாதம் முழுவதும் ஜெபமாலை மாதமாக கடைப்பிடிக்கிறார்கள். இதையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் காலை மாலை திருப்பலி மற்றும் ஜெபமாலை நடைபெற்றது இந்நிலையில் ஜெபமாலை மாதத்தின் இறுதி நாளான நேற்று திருச்சி சுப்பிரமணியபுரம் அருளானந்தர் ஆலயத்தில் பங்குத்தந்தை பிலோமின் ராஜ், உதவி பங்குத்தந்தை ஜஸ்டின் குழந்தை ராஜ் ஆகியோர் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது பின்னர் மாதாவின் திரு உருவச் சிலை ஏந்திய தேர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பின்னர் பங்கு தந்தையால் புனித நீர் தெளித்து வீதி உலா வந்தது இதில் பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

Leave A Reply

Your email address will not be published.