தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர்கள் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆய்வுகள் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவில் தலைவர் சௌந்தர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் பொது நிறுவனங்களுக்கு குழு உறுப்பினர்கள் அப்துல் சமது உடுமலை ராதாகிருஷ்ணன் கடம்பூர் ராஜு சின்னதுரை விஜயபாஸ்கர் ஆகியோர், TNPL வளாகம், கண்ணுடையான்
பட்டியில் உள்ள SIPCOT வளாகம்,
பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து முனையம் கட்டுமான பணிகள், கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் பாலகம்,
உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.