கூட்டுறவு வாரவிழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
திருச்சி, நவ. 17 70 ஆவது அனைந்திந்திய கூட்டுறவு வார விழாவினையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பரிசுகளையும் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், செயலாட்சியர் அரசு, திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் அபிபுல்லா, துணை மேயர் திவ்யா, மண்டல குழுத் தலைவர் மதிவாணன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.