காவிரி ஆற்றில் ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும்: த.வெ.க. அரசுக்கு தமிழக ஜனதா தளம் வேண்டுகோள்

0 18
Stalin trichy visit

திருச்சி ஆக 8  தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர்
வழக்கறிஞர் ராஜகோபால் திருச்சியில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக ஜனதா தளம் கட்சி வரவேற்கிறது.
இந்த பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து செய்திருக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பை இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல் கொள்முதல் விரைவுப்படுத்துதல் வேண்டும்

ஏற்கனவே மேகதாது விவகாரத்தில் தீர்ப்பு நமக்கு சாதமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் 105 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். கர்நாடகா அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் மெத்தனம் போக்கை கண்டிக்கின்றோம்.
தண்ணீர் பிரச்சனை தீர்க்க நதிகளை இணைக்க வேண்டும். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ250கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது அந்த நிதி போதாது. மேலும்அதிக அளவு நீதி ஒதுக்க வேண்டும். ஆறுகனை மத்திய அரசு தேசியமாக்க வேண்டும்.

1961 ம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராசி மணல் பகுதியில் காவிரி நீரை சேமிக்க ஆணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் அந்தத் திட்டம் நிறைவேறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அணை கட்டினால் 70 முதல் 100 டிஎம் டி வரை தண்ணீர் தேக்கலாம். அதன் பிறகு 60 ஆண்டு காலம்
திராவிட ஆட்சியில் இது குறித்து சிந்திக்கவில்லை.
இது குறித்து முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளோம். இது தொடர்பாக அதிகாரிகள் பதில் அனுப்பிள்ளார்கள்.மீண்டும் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தீர வேண்டும் என்றால் காவிரியில்
ராசி மணலில் அணை கட்ட வேண்டும். இந்த திட்டத்தை தமிழக வெற்றிக்கழக அரசு நிறைவேற்ற வேண்டும்.இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகத்தில் 15 மாவட்டத்திற்கு தண்ணீர் பிரச்சனை வராது. விவசாயிகள் மும்முனை மின்சார இணைப்புக்கு பணம் கட்டி விவசாயிகளுக்கு இன்னமும் மின் இணைப்பு கிடைக்காமல் இருக்கிறது. அவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில்ஜாதி வாரி கணக்கெடுப்பை இந்த அரசு நடத்தி ஒவ்வொரு ஜாதிக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
காவிரி பிரச்சனைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்.
தொகுதி மறு சீரமைப்பு குறித்ததான தமிழக எம்பிக்கள் கருத்தை அறியும் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது தவறு  இவ்வாறு ராஜகோபால் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாநிலத் துணைத் தலைவர் கேசி ஆறுமுகம், பொதுச்செயலாளர் ராஜசேகரன்,மாநில செயலாளர்கள் அறிவழகன், கார்த்தி, திருச்சி மாவட்டத் தலைவர் அருண், தொழிற்சங்கம் குப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் ராகுல், வழக்கறிஞர் சுப்பிரமணி முருகானந்தம், சங்கலி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.